சினிமா

அடேங்கப்பா, கீர்த்தி சுரேஷிற்கு சர்க்கார் படக்குழு கொடுத்த பெரிய சர்ப்ரைஸ், குஷியான அம்மணி.!

Summary:

sunpictures surprised keerthi suresh

தனது கடின உழைப்பால் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது வெற்றி நாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷ் 1992, அக்டோபர் 17 ஆம் நாளில் சென்னையில் பிறந்தார்.

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆவது ஆண்டில் கீதாஞ்சலி என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும்  நாளை கீர்த்திசுரேஷ் நடித்த சண்டக்கோழி 2 படம் வெளியாக இருக்கிறது,மேலும் அதைத்தொடர்ந்து  தீபாவளிக்கு விஜய்யுடன் நடித்துள்ள சர்கார்  வெளியாக இருக்கிறது.

இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்நிலையில் இன்று நடிகை கீர்த்தி சுரேஷிற்கு பிறந்தநாள்,அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் வாழ்த்துக்களை குவித்துக்கொண்டு உள்ளனர்.

மேலும்  அவருக்கு வாழ்த்து கூற சர்கார் தயாரிப்பு நிறுவனம் சன்பிக்சர்ஸ் ஒரு அழகான வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 


 


Advertisement