AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
சுந்தர்.சியின் அதிர்ச்சி முடிவால் திரையுலமே மிரட்சி.! சோகத்தில் மூழ்கிய ரஜினி கமல்.!
தமிழ் சினிமாவின் பெரும் சாம்ராஜ்யங்களான கமல் மற்றும் ரஜினி இணையும், "தலைவர் 173 " படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. கமல்ஹாசனின், "ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்." நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ரஜினி ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்க இருந்தார்.
சில நாட்களுக்கு முன் செய்தி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்ற நிலையில், சுந்தர்.சி ஒரு அதிர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில், "எதிர்பாராத சூழ்நிலை காரணமாக ரஜினி கமலுடன் இணையும் வாய்ப்பு என்னை விட்டு செல்கிறது. இந்த பெருமை மிகுந்த படத்தில் இருந்து விலகுகிறேன். இது ஒரு கடினமான முடிவு. ஆனால் என்னால் தவிர்க்க முடியவில்லை." என்று தெரிவித்துள்ளார்.

படம் குறித்த அறிவிப்பு வெளியாகிய சில நாட்களிலேயே இயக்குனர் அந்த படத்தில் இருந்து விலகுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுவும், ரஜினி - கமல் இணையும் படத்திலிருந்து பிரபல இயக்குனரான சுந்தர் சி இந்த முடிவை எடுத்து இருப்பது சினிமா துறையையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மேலும், சுந்தர் சி தன்னுடைய அறிக்கையில், "ரஜினி கமல் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவது என் வாழ்நாள் கனவு. ஆனால், இந்த கனவு தற்போது பலிக்காமல் போய்விட்டது." என்று உணர்ச்சிபூர்வமாக தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: #சற்றுமுன் : விஜயின் ஜனநாயகன் போஸ்டரில் சர்ப்ரைஸ்.. ரசிகர்கள் படுகுஷி.!
அத்துடன் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ரசிகர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். அடுத்ததாக இந்த படத்தை யார் இயக்குவார் என்பது தெரியவில்லை. விரைவில் தயாரிப்பு நிறுவனம் புதிய இயக்குனர் பற்றிய அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2027 பொங்கலுக்கு இந்த படம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சுந்தர்.சி யின் இந்த முடிவு பட வெளியீட்டை தள்ளிப் போடும் என்று கூறப்படுகிறது.