#சற்றுமுன் : விஜயின் ஜனநாயகன் போஸ்டரில் சர்ப்ரைஸ்.. ரசிகர்கள் படுகுஷி.!



jananayagan movie poster released

தளபதி விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அட்டகாசமான வரவேற்புகளை பெற்று வருகிறது. 

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் தான் ஜனநாயகம். இந்த திரைப்படத்தின் எடிட்டிங் பணிகள் தற்போது முடிவடைந்து இருக்கிறது. வரும் ஜனவரி 9ம் தேதி பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.

jananayagan

இதில், நடிகை பூஜா ஹெக்டே மற்றும் நடிகை மமீதா பைஜூ இருவரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கின்ற இந்த படத்தின் முதல் பாடல் தீபாவளியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கரூர் சம்பவம் காரணமாக அது தள்ளிப்போனது. 

இதையும் படிங்க: அட.. இது வித்தியாசமா இருக்கே.! ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்னனு பார்த்தீங்களா!!

இந்த நிலையில், படம் வரும் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என்பதை படக்குழு உறுதிப்படுத்தி போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. ஜனநாயகன் திரைப்படம் முழுக்க அரசியல் பற்றியதாக இருக்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், அதை நிரூபிக்கும் விதமாக மக்கள் ஆதரவுடன் கூட்டத்தில் தளபதி விஜய் இருப்பதை போன்ற ஒரு புகைப்படம் தான் போஸ்டரில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது அவரது ரசிகர்களுக்கு பெரும் சர்ப்ரைசாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: SK ரசிகர்களே தயாரா.! 05:30 மணிக்கு அட்டகாசமான அப்டேட்.!