சினிமா

பாசமுள்ள புதுமலர்கள், இந்த "வானத்தைப்போல" இரு மலர்கள்!! ரசிகர்களை மகிழ்விக்க வரும் சன் டிவியின் புதிய சீரியல்!

Summary:

அடுத்த வாரம் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் இரவு 7:30 மணிக்கு வானத்தைப்போல என புத்தம் புதிய சீரியலை துவங்குகின்றனர் சன் டிவி.


இந்திய அளவில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சியின் இந்த பிரமாண்ட வெற்றிக்கு மிக முக்கிய காரணம் அதில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் என்றே கூறலாம். சிறுவர்கள் தொடங்கி, இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரையும் கவர்ந்த தொடர்களை வழங்கி, ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது சன் டிவி.

இந்தநிலையில், சன் டிவியில் சமீபத்தில் அபியும் நானும், கண்ணான கண்ணே, அன்பே வா என்ற புதிய தொடர்களை தொடங்கியது சன் டிவி. இந்த புதிய தொடர்கள் மூன்றுமே அணைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. இந்தநிலையில் சன் டிவியில் பல மாதங்களாக ஒளிபரப்பாகி, ரசிகர்களின் ஆதரவை பெற்றுவந்த கண்மணி தொடர் கடந்த வாரம் சனிக்கிழமை நிறைவு பெற்றது.

இந்தநிலையில் சன் டிவியில் மீண்டும் ஒரு புதிய சீரியலை ரசிகர்களுக்காக சன் டிவி களமிறக்குகின்றது. அடுத்த வாரம் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் இரவு 7:30 மணிக்கு "வானத்தைப்போல" என புத்தம் புதிய சீரியலை துவங்குகின்றனர் சன் டிவி. இந்த சீரியல் அண்ணன் தங்கச்சி பாசத்தை அடிப்படையாக வைத்து ஆரம்பமாகவுள்ளது. இந்த சீரியலுக்கான புரோமோவையும் வெளியிட்டுள்ளனர். அந்த புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement