சினிமா

கொரோனாவுக்கு பிறகு புத்தம் புதிய சீரியலை களமிறக்கும் சன் டி.வி.! தீவிர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

Summary:

sun tv new serial

சீரியல் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது சன் தொலைக்காட்சி தான். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை சன் தொலைக்காட்சி சீரியல்களுக்கு தீவிர ரசிகர்களாக இருந்துவருகின்றனர். அதற்க்கு முக்கிய காரணம் சன் தொலைக்காட்சி ஆரம்பத்தில் இருந்து மக்களை ஈர்க்கும் வகையில் பிரமாண்ட நடிகர்களை வைத்து சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகள் கடந்த மார்ச் மாதத்தில் நிறுத்தப்பட்டன. அதனால் பழைய சீரியல்களே ஒளிபரப்பப் பட்டு வந்தன. இந்நிலையில் இப்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கியுள்ள நிலையில் புதிய எபிசோட்கள் ஒளிபரப்பு ஆரம்பமாகியுள்ளது.


இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் திருமகள் என்ற புத்தம் புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. அந்த சீரியலுக்கான ப்ரோமோ நேற்று வெளியானது. அஞ்சலியின் ஆசை நிறைவேறுமா? என்ற டயலாக்குடன் பரபரப்பாக ப்ரோமோ வெளியாகி விரைவில் உங்கள் சன் டி.வி-யில் என ஒளிபரப்பாகி ரசிகர்களுக்கு தீவிர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement