சினிமா

வேதனையா இருக்குது! விமான நிலையத்தில் நடிகை சுதா சந்திரனுக்கு நேர்ந்த சம்பவம்! மன்னிப்பு கேட்ட மத்திய பாதுகாப்பு படை!!

Summary:

வேதனையா இருக்குது! விமான நிலையத்தில் நடிகை சுதா சந்திரனுக்கு நேர்ந்த சம்பவம்! மன்னிப்பு கேட்ட மத்திய பாதுகாப்பு படை!!

இந்திய மொழிகளில் ஏராளமான திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சுதா சந்திரன். இவர் பிரபல நடன கலைஞர் ஆவார். சுதா சந்திரன் ஏராளமான நடன நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்றுள்ளார். இவர் கடந்த 1981-ஆம் ஆண்டு நடந்த விபத்து ஒன்றில் தனது காலை இழந்தார்.

அதனை தொடர்ந்து அவர் செயற்கை கால் பொருத்தி அசத்தலாக தனது கலைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், அண்மையில் சுதாசந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஒரு வேண்டுகோள். நான் ஒவ்வொரு முறை தொழில் முறை பயணம் செய்யும் போதும் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் என் செயற்கை காலை கழற்றி காட்டச் சொல்கின்றனர். மிகவும் வேதனையாக இருக்கிறது.  சமூகத்தில் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு கொடுக்கும் மரியாதையா இது? மூத்த குடிமக்களுக்கு  ஒரு சிறப்பு அடையாள அட்டையை வழங்குங்கள் என்பதே எனது பணிவான வேண்டுகோள் என கூறியுள்ளார்.

இந்த வீடியோ வைரலான நிலையில், 
மத்திய பாதுகாப்புப் படை தனது ட்விட்டர் பக்கத்தில், உங்களுக்கு ஏற்பட்ட இந்த சிரமத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். குறிப்பிட்ட சமயங்களில் மட்டுமே பிராஸ்தடிக்ஸ் பாகங்கள் நீக்கிப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். உங்களை ஏன் அப்படிச் செய்யச் சொன்னார் என்று விசாரிக்கிறோம். எந்தப் பயணிக்கும் சிரமம் ஏற்படாமல் இருக்க ஊழியர்களுக்கு விதிமுறைகள் குறித்து மீண்டும் வலியுறுத்துவோம் என மன்னிப்பு கோரி பதிவு வெளியிட்டுள்ளனர்.


Advertisement