சினிமா

சன் நெக்ஸ்ட் ஆப்பில் சர்கார் பாடல் திடீர் நிறுத்தம்? ஏன் தெரியுமா?

Summary:

Sudden Next to Sunrise Sarkar song

பிரபல திரைப்பட இயக்குனர்  ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் தற்போது " சர்கார் " என்னும் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இந்த படத்தில் இளைய தளபதி விஜய் அவர்கள் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இந்த சர்க்கார் என்னும் படம் தளபதி விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் அமைந்த மூன்றாவது படமாகும்.

இந்த சர்க்கார் திரைப்படம் வருகின்ற தீபாவளிக்கு வெளிவர உள்ளது. மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் தான் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் சில முக்கிய வேடங்களில் ராதாரவி, வரலட்சுமி மற்றும் சரத்குமார், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் இந்த படத்தின் ஒரு பாடல் மட்டும் நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடபட்டது.

அந்த பாடலின் லிரிக்கல் வீடியோவை சன் நெக்ஸ்ட் ஆப்பில் வெளியிடபட்டது. அந்த ஆப்பில் சரியாக 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கபட்டது. அதனால் பலரும் அந்த சன் நெக்ஸ்ட் ஆப்பை டவுன்லோட் செய்தனர். மேலும் அந்த பாடலை ஒரே நேரத்தில் அந்த சன் நெக்ஸ்ட் ஆப்பில் கேட்டதால் சில நிமிடங்கள் அந்த ஆப்பில் அந்த பாடலை நிறுத்தப்பட்டது. இதனால் ரசிகர்கக்ள் பெரும் குழப்பமடைந்தனர்.


Advertisement