சினிமா

#MeToo : எதிரொலி புது பட வாய்ப்பை இழக்கும் ஸ்ருதி ஹரிஹரன்; வெளியான பரபரப்பு தகவல்.!

Summary:

sruthi harikaran - arjun - sex tourcher

நடிகை ஸ்ருதி ஹரிஹரன் படப்பிடிப்பின்போது நடிகர் அர்ஜுன் பாலியல் ரீதியாக எனக்கு தொல்லை கொடுத்தார் என்று சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு கன்னட படத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

பாடகி சின்மயி தொடர்ந்து பிரபலமான நடிகைகள் மற்றும் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை பற்றி சமீபத்தில் தெரிவித்து வந்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தனது பங்குக்கு நடிகர் அர்ஜுன் மீது பாலியல் குற்றம் சுமத்தினார்.

Image result for sruthi hariharan

நடிகர் அர்ஜுனும் ஸ்ருதி ஹரிஹரனும் கணவன்-மனைவியாக இணைந்து நடித்த கன்னட படம் விஸ்வமயா. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அனைவரின் முன்னிலையில் என் அனுமதியில்லாமல் அர்ஜுன் என்னை கட்டி பிடித்தார் என்று பரபரப்பு குற்றம் சுமத்தினார்.

இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் தன் மீது பொய் குற்றம் சுமத்தியுள்ளார். எனவே மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்வேன் என்று தெரிவித்த நிலையில் ஸ்ருதி ஹரிஹரன் அர்ஜுன் மீது பெங்களூர் கப்பன் பார்க் காவல் நிலையத்தில்  புகார் அளித்திருந்தார்.

இதனால் கன்னட திரைப்பட வர்த்தக சபை இருவரையும் அழைத்து சமாதானம் செய்ய சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அதில் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் முடிவில் தோல்வியில் முடிந்தது.

Image result for sruthi hariharan

இந்த நிலையில் ஸ்ருதி ஹரிஹரன் கன்னடத்தில் புதிதாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த ”தாரி தப்சித்ட்சனா தேவரு” என்ற படத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அப்படத்தின் இயக்குனர் தெரிவிக்கும்போது: 

45 நாட்கள் இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் நடைபெற இருந்தன. ஆனால், ஜனவரி மாதத்திற்கு பிறகு ஸ்ருதி அர்ஜூன் மீதான வழக்குகளுக்கு வேண்டி நீதிமன்றம் செல்லவுள்ளதால், இந்த படத்தில் நடிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். அதனாலே அவரை படத்திலிருந்து நீக்க வேண்டியதாகி விட்டது என்று கூறினார். 
 


Advertisement