நடிகை ஸ்ரீதேவியின் ஒரு புடவையின் விலை இவ்வளவா? அதை என்ன செய்தார்கள் தெரியுமா?

நடிகை ஸ்ரீதேவியின் ஒரு புடவையின் விலை இவ்வளவா? அதை என்ன செய்தார்கள் தெரியுமா?


sridevi saree sale for 1.30000

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார் நடிகை ஸ்ரீதேவி. 

இவர் கமல், ரஜினியுடன்  இணைந்து பல திரைப்படங்களில் நடித்த இவற்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களிலும் சுமார் 300 படங்களில் நடித்துள்ளார். மேலும் கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் நாள் துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்ற ஸ்ரீதேவி மரணமடைந்தார்.

sridevi

அதனைத்தொடர்ந்து நேற்று இவரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.அதில்  ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில் ஸ்ரீதேவிக்கு மிக பிடித்த புடவை ஏலத்திற்கு விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை  ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் ஏலம் விட்டிருந்தார்.

sridevi

புடவையின் விலை 40 ஆயிரத்திற்கு தொடங்கப்பட்ட இந்த ஏலம் இறுதியில் 1.30000 ரூபாய்க்கு முடிந்தது.

இந்த ஏலத்தில் கிடைக்கும் பணத்தினை தொண்டு நிறுவனத்திற்கு அளிக்கபடும் என ஸ்ரீதேவியின் கணவர் தெரிவித்துள்ளார்.