விஜய் டிவி பிரபலத்துடன் குத்தாட்டம் போட்ட நடிகை ஸ்ரீ தேவி.! என்ன பாட்டுக்கு பார்த்தீங்களா.! வைரல் வீடியோ!!sridevi-dance-with-rio-video-viral

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த விஜயகுமார் மஞ்சுளா அவர்களின் மகள் ஸ்ரீதேவி. அவர் சத்யராஜ் மற்றும் குஷ்பு நடிப்பில் வெளிவந்த ரிக்ஷா மாமா படத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அவர் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.தொடர்ந்து ஸ்ரீதேவி தெலுங்கில் 2002-ஆம் ஆண்டு வெளிவந்த ஈஸ்வர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.

ஸ்ரீ தேவி நடித்த படங்கள் 

 

மேலும் தமிழ் சினிமாவில் காதல் வைரஸ் என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதனை தொடர்ந்து அவர் பிரியமான தோழி, ஜீவாவுடன் தித்திக்குதே, தனுஷ் உடன் தேவதையை கண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை ஸ்ரீ தேவி 2009ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இதையும் படிங்க: முன்னழகை காட்டி மூச்சுமுட்ட வைத்த ஜான்வி கபூர்.. வைரல் புகைப்படங்கள்!

ரியோவுடன் போட்ட குத்தாட்டம் 

 

அதனைத் தொடர்ந்து சினிமாவிற்கு இடைவெளி விட்டிருந்த அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டுள்ளார். நடிகை ஸ்ரீதேவி தற்போதும் இளமை மாறாமல் கொள்ளை அழகில் ஜொலித்து வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீ தேவி தளபதி விஜய்யின் கில்லி படத்தின் 'அப்படி போடு' பாடலுக்கு விஜய் டிவி தொகுப்பாளரும், நடிகருமான ரியோவுடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

இதையும் படிங்க: கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோ ஷூட் நடத்திய ஜான்வி கபூர்.. வைரல் புகைப்படங்கள்!