தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
நடிகர் ஜெயராமன் வீட்டில் அடுத்தடுத்து நடக்கும் சுப நிகழ்ச்சிகள்.!
தமிழ் மலையாளம் போன்ற மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெயராம் அவர்களின் நடிப்பும், நகைச்சுவையான பேச்சும், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதன் காரணமாகவே, தமிழ் மற்றும் மலையாளத்தில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸுக்கு சமீபத்தில் தான் அவருடைய காதலியான தாரணி என்ற மாடல் அழகியுடன் நிச்சயதார்த்தம் நடந்தது.மிக விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையுடன் தற்போது நடிகர் ஜெயராமின் மகள் மாளவிகாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நடிகர் ஜெயராமின் மகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.