தமிழகம் சினிமா

பாடகர் எஸ்பிபி மறைவிற்கு பிறகு பலரது மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல்.!

Summary:

SPB touchable song

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக ஆகஸ்ட் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எக்மோ மற்றும்  வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில் திடீரென நேற்று முன்தினம் எஸ்பிபி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்தநிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திரைப்பிரபலங்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவால் சோகத்தில் இருந்த ரசிகர்கள் அவரது புகைப்படங்களையும், வீடியோவையும் பகிர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நேற்றயதினம் முதல் பலரது மனதிலும் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல் “இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்........” இந்த வரிகள் தான். எஸ்பிபி அவர்கள் மறைந்தாலும் காற்று உள்ளவரை அவரது குரல் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும் என கூறி பலரும் நேற்றையதினம் ஸ்டேட்டஸ் வைத்தனர். தற்போதுவரை அந்த வரிகள் பலரது மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. எஸ்பிபி பாடிய அணைத்து பாடல்களும் மக்களுக்கு விருந்தாகவும், மருந்தாகவும் இருந்துவருகிறது.


Advertisement