சினிமா

பாடகர் எஸ்.பி.பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எப்படியுள்ளார் பார்த்தீர்களா! வைரலாகும் கண்கலங்க வைக்கும் புகைப்படம்!

Summary:

Spb photo while got treatment in hospital

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஜிஎம்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் திடீரென கடந்த மாதம் 14ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு எக்மோ மற்றும்  வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுவந்தது. ஆனால் திடீரென நேற்று மீண்டும் எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகி சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார். இவரது இந்த மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் எஸ்.பி.பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

 


Advertisement