டிவி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எஸ்.பி.பி போட்ட அந்த கண்டிஷன்: தயாரிப்பாளர் பகிர்ந்த நெகிச்சி தகவல்!

spb conditions to participate in TV shows goes viral


spb conditions to participate in TV shows goes viral

குழந்தைகள் பங்கேற்கும் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள எஸ்பிபி அவர்களை அணுகிய போது அவர் விதித்த நிபந்தனைகள் குறித்து தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் ஸ்வப்னா தத்.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி லேசான கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

SPB

இந்தியா முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்க்ளின் மறைவுக்கு இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் உட்பட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். மேலும் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுடன் பணியாற்றிய தங்களது சுவாரஸ்ய நிகழ்வுகள் குறித்தும் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் அவர்கள் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களுடன் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "எனக்கு இப்போதும் அவர் சொன்ன வார்த்தைகள் ஞாபகம் இருக்கின்றன. ஆம், குழந்தைகள் பாட்டு பாடும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களை நான் அணுகி இருந்தேன். குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தான் கூறும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று  எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் ஒரு கட்டுப்பாடு விதித்தார்.

SPB

தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் எந்த ஒரு காரணத்திற்காகவும் ஒரு குழந்தைகூட அழுவதை நான் அனுமதிக்க மாட்டேன் என்றும், அப்படியே குழந்தை அழுதாலும் அதை படம்பிடித்து TRP ரேடிங்கிர்க்காக குழந்தை அழுவதை தொலைக்காட்சியில் காட்டக்கூடாது என எஸ்பிபி கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளனர்".

 மேலும் அவர் சொன்ன அந்த வார்த்தையை தான் ஏற்றுக் கொண்டதாகவும், அவரது பார்வை தொலைக்காட்சி மீதான எனது பார்வையையும் மாற்றியதாகவும், தனது குழந்தைகள் மற்றும் அடுத்தடுத்து வரும் தலைமுறை குழந்தைகள் உங்களுக்கு எப்போதும் நன்றி கடன் பட்டு இருப்பார்கள் என்றும் தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.