அடேங்கப்பா! நடிகர் சூரியின் பிறந்தநாளில், அவரது ரசிகர்கள் செய்த காரியத்தை பார்த்தீர்களா! வேற லெவல்.. குவியும் வாழ்த்துக்கள்!

அடேங்கப்பா! நடிகர் சூரியின் பிறந்தநாளில், அவரது ரசிகர்கள் செய்த காரியத்தை பார்த்தீர்களா! வேற லெவல்.. குவியும் வாழ்த்துக்கள்!


Soori fans done lot of welfare contribution for his birthday

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் பரோட்டா காமெடியின் மூலம் பிரபலமாகி, அதனைத்தொடர்ந்து  ஏராளமான திரைப்படங்களில் தனது காமெடியால் ரசிகர்களை உற்சாகப்படுத்தி தற்போது முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. அவர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இந்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அவரது ரசிகர்கள் ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்துள்ளனர். இரத்த தானம் கொடுப்பது , மரக்கன்றுகளை நடுவது, ஏழை மக்களுக்கு புத்தாடை கொடுப்பது, இனிப்புகளை வழங்குவது என மிகவும் அசத்தலான முறையில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

Soori

மேலும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, மதிய உணவு வழங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி அவர்களுக்கு தேவையான அரிசி,  காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் முகக்கவசம்,  சானிடைசர் போன்றவற்றையும் வழங்கியுள்ளனர்.  இந்நிலையில் நடிகர் சூரிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.