பார்ரா.. கலக்குறாரே.! சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாகும் நடிகர் சூரி.! படத்தோட டைட்டில் என்ன தெரியுமா??

பார்ரா.. கலக்குறாரே.! சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாகும் நடிகர் சூரி.! படத்தோட டைட்டில் என்ன தெரியுமா??


soori-became-hero-in-sivakarthickeyan-production-movie-AGAUMF

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு கொட்டுக்காளி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கூழாங்கல்’ இயக்குநர் வினோத்ராஜ் இயக்குகிறார். அந்த படம் பல சர்வதேச விருதுகளை பெற்றிருந்தது.

Soori

கொட்டுக்காளி படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அன்னா பென் நடிக்கவுள்ளார். இதன் படபூஜை விழா அண்மையில் நடைபெற்றது அதனை தொடர்ந்து தற்போது கொட்டுக்காளி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து சூரி மற்றும் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.