சினிமா

கொரோனா ஊரடங்கு! தினமும் 45 ஆயிரம் பேருக்கு உணவளிக்கும் பிரபல வில்லன் நடிகர்!

Summary:

Sonu sood donate food for poor people

சீனாவில்  தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அசுர வேகத்தில் பரவிவருகிறது. இத்தகைய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியநிலையில் 11000க்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த  நாடு முழுவதும் மே 3வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கபட்டுள்ளது. இந்நிலையில்  சிறுகுறு தொழில்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது மேலும் கூலித் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து உண்ண உணவு கூட இல்லாமல் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழில் கள்ளழகர், மஜ்னு, சந்திரமுகி போன்ற படங்களில் கொடூர வில்லனாக  நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் சோனு சூட் மும்பையில் தினமும் உணவின்றி தவித்துவரும் ஏழை மக்கள் 45 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகிறார். அவரது சேவையை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.


Advertisement