மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
அந்த இடத்தில் கை வைத்து தட்டிய மர்ம நபர்.. வரலட்சுமி செய்த செயலால் அதிர்ந்து போன நண்பர்கள்.?
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருந்த சரத்குமார் இவரின் மகள் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் சினிமாவில் 'போடா போடி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
முதல் படமே பெரிதளவு வெற்றி பெறவில்லை. இருந்தபோதிலும் அடுத்தடுத்து திரைப்படங்கள் நடித்துக் கொண்டிருந்தார் வரலட்சுமி.
கதாநாயகியாக மட்டுமில்லாமல், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லியாகவும் நடித்திருந்தார்.
தமிழில் சரிவர பட வாய்ப்புகள் இல்லாததனால் தெலுங்கில் தன் கவனத்தை திசை திருப்பி நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
இதுபோன்ற நிலையில், வரலட்சுமி இரவு பார்ட்டிக்கு சென்றிருந்தபோது அங்கு ஒரு மர்ம நபர் வரலட்சுமி பின்பக்கத்தில் தட்டி இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த வரலட்சுமி அந்த நபரை சரமாறியாக அடித்துள்ளார். அங்கிருந்து தப்பியோடினார் அந்த நபர். துரத்தி பிடித்து அந்த நபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்து இருக்கிறார் வரலட்சுமி. இதன் பிறகு எந்த ஒரு பெண்ணையும் அவன் தொடவே யோசிப்பான் என்று வரலட்சுமி கூறினார். இச்செய்து தற்போது வைரலாகி வருகிறது.