விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்விடுத்தவர் யார் தெரியுமா? கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை.

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்விடுத்தவர் யார் தெரியுமா? கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை.


Social media threaten to actor vijay sethupathi daughter

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் வித்த நபர் குறித்த தகவல்களை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

பிரபல முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானநிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பலதரப்பிலும் இருந்து கண்டனம் எழுந்தது.

800

இதனை அடுத்து 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகினார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பப்பட்டது. இந்த சம்பவம் வைரலானநிலையில் மிரட்ட விடுத்த நபரை கைது செய்யவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீசார், பாலியல் மிரட்டல் வந்த ஐபி முகவரியை வைத்து அந்த நபர் இலங்கையை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்திய அரசின் மூலம் இலங்கை அரசாங்கத்துடன் பேசி குறிப்பிட்ட நபரை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.