திருமணத்திற்கு முன் டேட்டிங் சென்றுள்ள நடிகை சினேகா! யாருடன் தெரியுமா? முதன்முறையாக வெளியான அரிய புகைப்படம்!!

திருமணத்திற்கு முன் டேட்டிங் சென்றுள்ள நடிகை சினேகா! யாருடன் தெரியுமா? முதன்முறையாக வெளியான அரிய புகைப்படம்!!snega-prasanna-first-dating-photos-viral

தமிழ் சினிமாவில் வெளிவந்த என்னவளே என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் சினேகா. அதனைத் தொடர்ந்து அவர் கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் இணைந்து ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார். மேலும் இவருக்கு என பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.

இந்த நிலையில் சினேகா 2009 ஆம் ஆண்டு வெளிவந்த அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்த போது அதன் ஹீரோவான பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு தற்போது இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சில காலங்கள் சினிமாவிற்கு இடைவெளி விட்டிருந்த சினேகா தற்போது மீண்டும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நட்சத்திர கியூட் ஜோடிகளாக வலம்வரும் சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கக் கூடியவர். அவ்வப்போது அவர்கள் தங்களது மகன், மகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் தற்போது நடிகர் பிரசன்னா-சினேகாவை காதலிக்கும் போது முதன் முதலாக டேட்டிங் சென்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.