அடேங்கப்பா.. வெளிநாட்டு நடிகையா! SK20 படத்தின் ஹீரோயின் யார்னு பார்த்தீங்களா! செம ஜாலியில் ரசிகர்கள்!!sk20-movie-heroine-detail-released

தமிழ் சினிமாவில் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து, பின்னர் ஹீரோவாக களமிறங்கி தனது தீராத கடின உழைப்பால் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நாயகனாக கொடிகட்டி பறப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டாக்டர் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் அவரது நடிப்பில் உருவாகியுள்ள டான் படமும் விரைவில் ரிலீசாகவுள்ளது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அனுதீப் இயக்கத்தில் SK20 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் தற்போது SK20 படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிரபல உக்ரைன் நடிகை  Maria Ryaboshapka இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.