சதீஷ் வீட்டில் நடந்த கோலாகல கொண்டாட்டம்! நேரில் சென்று வாழ்த்திய முன்னணி நடிகர்! அட.. யார்னு பார்த்தீங்களா!!Sk join in sathish daughter celebration

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து மதராசபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே, பைரவன், கத்தி போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் பேவரைட் காமெடி நாயகனாக வலம் வருபவர் சதீஷ். அவர் தற்போது சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். 

நடிகர் சதீஷ் கல்பாத்தி எஸ்.அகரம் நிறுவனம்  தயாரிப்பில், கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் வெளிவந்த நாய் சேகர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து சதீஷ் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் அவருடன் பாலிவுட் கவர்ச்சி புயல், இளசுகளின் கனவுக்கன்னி சன்னி லியோனும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

Sk

நடிகர் சதீஷ்க்கு கடந்த 2019 ஆம் ஆண்டு சிந்து என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கடந்த ஆண்டு அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அண்மையில் சதீஷ் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்டு குழந்தையை வாழ்த்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.