சினிமா

பாலிவுட் நடிகையுடன் ஜோடி சேரும் நடிகர் சிவகார்த்திகேயன்! எந்தப்படம் தெரியுமா?

Summary:

Sivakarthikeyan casting with polywood stars in new movie

தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சீமராஜா திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றிபெறவில்லை. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது நேற்று இன்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் சைன்ஸ் பிக்ஷன் படத்தில் நடித்து வருகிறார்.

அதன் பின்னர் இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சிவா நடிப்பதாகவும் அந்த படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க போவதாகவும் தகவல்கள் வந்தன. ஆனால் தற்போது அந்த படத்தை மற்றொரு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கப்போவதாகவும் அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்க போவதாகவும், அதற்கான தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.


Advertisement