சினிமா

அட.. தலைவர் இனி செம பிசிதான்.! அடுத்த படத்திற்கு தயாரான சிவகார்த்திகேயன்! இயக்குனர் யார் தெரியுமா??

Summary:

அட.. தலைவர் இனி செம பிசிதான்.! அடுத்த படத்திற்கு தயாரான சிவகார்த்திகேயன்! இயக்குனர் யார் தெரியுமா??

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் தனது திறமையால், கடின உழைப்பால் முன்னேறி, தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கென சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அண்மையில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று ஹிட்டான திரைப்படம் டான்.

இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் SK20 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் பிரேம்ஜி, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21-வது படத்தில் நடிக்கிறார்.  இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் 22வது திரைப்படமான இதனை மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக சமந்தா அல்லது கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதில் இயக்குனர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரே நேரத்தில் சிவகார்த்திகேயன் தனது 21 மற்றும் 22வது படத்தில் பிசியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


    


Advertisement