வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்! செம்ம ஹேப்பியில் சிவகார்த்திகேயன்! எதனால் பார்த்தீங்களா!!

வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்! செம்ம ஹேப்பியில் சிவகார்த்திகேயன்! எதனால் பார்த்தீங்களா!!


sivakarthickeyan-met-rajini-photo-viral

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று ஹிட்டாகி வரும் திரைப்படம் டான். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.

இதில் ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் சிவாங்கி, பால சரவணன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கல்லூரி கதையை மையமாகக் கொண்ட இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் டான் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பட குழுவினருக்கும், சிவகார்த்திகேயனுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் ரஜினியை அவரது வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், இந்திய சினிமாவின் டான் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்தேன். அவரின் ஆசிர்வாதத்தை பெற்றேன். அந்த 60 நிமிடங்கள் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள். டானை பற்றிய உங்கள் பாராட்டிற்கும், எனக்காக நேரம் ஒதுக்கியதிற்கும் மிக்க நன்றி தலைவா என பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.