என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
வாவ்.. செம கியூட்! நடிகர் சிவகார்த்திகேயன் மகளா இது! நல்லா வளர்ந்து அடையாளமே தெரியாம மாறிட்டாரே!!

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து தனது திறமையால், கலகலப்பான குணத்தால் முன்னேறி ஏராளமான திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் அனைத்தும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவ்வாறு நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டு விளங்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி. இவர்களுக்கு ஆராதனா என்ற பெண்குழந்தை உள்ளது.
ஆராதனா கனா படத்தில் வாயாடி பெத்த புள்ள பாடலை பாடி பெருமளவில் பிரபலமானார். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் மகளை அவரது ரசிகர்கள் பார்த்து சில வருடங்கள் ஆனநிலையில், அவர்கள் குடும்பத்துடன் அண்மையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் ஆராதனாவா இது! இப்படி வளர்ந்துட்டாரே என ஆச்சர்யம் அடைந்துள்ளனர். மேலும் அதனை வைரலாக்கியும் வருகின்றனர்.