நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
1960ஆம் ஆண்டே வெள்ளத்தின் போது நடிகர் சிவாஜி கணேசன் தன் வீட்டில் செய்த காரியம்! வைரலாகும் அரிய புகைப்படம்!!

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தொடர் கன மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. அதிலும் தலைநகரான சென்னையின் பல முக்கிய பகுதிகள் கடுமையான மழையால் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது.
மேலும் ஆங்காங்கு பலத்த காற்றும் வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. பல பகுதிகளில் கடும் வெள்ளத்தால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் பெரும் அவதிப்பட்டனர். அவர்களுக்கு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் உதவி செய்தன. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பல சமூக வலைதளங்களில் வைரலானது.
ஆனால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 1960ஆம் ஆண்டே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது வீட்டில் உணவு சமைத்து வழங்கியுள்ளாராம். மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரை மூன்று வேளையும் தனது வீட்டிலேயே, தன் மேற்பார்வையில் சமையல் செய்து சாப்பாடு அளித்துள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.