பள்ளி மாணவராக தோன்ற உள்ள சிவகார்த்திகேயன்... எந்த படத்தில் தெரியுமா.? மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்...Siva Karthikeyan Don movie character released

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து தனது திறமையாலும், கடின உழைப்பாலும் தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

தற்போது சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, பிரியங்கா மோகன் ஆகியோருடன் சேர்ந்து டான் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற மே 13 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது.

Siva Karthikeyan

இந்நிலையில் டான் படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது டான் படத்திற்கு U சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் படம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் ஓடும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் புதிய தகவலாக டான் படத்தின் ஃபிளாஷ் பேக் காட்சிகளில் சிவகார்த்திகேயன் பள்ளி மாணவராக தோன்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இதற்கு முன்னதாக 3 படத்தில் பள்ளி மாணவராக சிவகார்த்திகேயன் தோன்றியது குறிப்பிடத்தக்கது.