எனது நீண்ட ஆசை நிறைவேற போகிறது, உச்சகட்ட மகிழ்ச்சியில் சொப்பன சுந்தரி பாடகி, காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்,.!
வீரசிவாஜி படத்தில் சொப்பன சுந்தரி பாடலின் மூலம் மிகப்பிரபலமானவர் வைக்கம் விஜயலட்சுமி. கேரளாவை சேர்ந்த பிரபல சினிமா பின்னணி பாடகியான இவர் பிருதிவிராஜ் நடித்த ஜே.சி. டேனியல் படத்தில் இடம்பெற்ற 'காற்றே காற்றே' பாடல் மூலம் தமிழிலும் பாடகியாக அறிமுகமானார்.
பார்வையற்றவரான வைக்கம் விஜயலட்சுமியின் வாழ்க்கை சினிமாவாக எடுக்கப்படுகிறது.. இதில் வைக்கம் விஜயலட்சுமி கதாபாத்திரத்தில் கேரளாவில் மீன் விற்று படித்து பிரபலமான ஹனன் நடிக்கிறார். வைக்கம் விஜயலட்சுமிக்கும், மிமிக்ரி கலைஞரான அனூப்புக்கும் வருகிற 22ம் தேதி திருமணம் நடக்க உள்ளது.
இந்த நிலையில் வைக்கம் விஜயலட்சுமி தனக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை மூலம் அடுத்த வருடம் பார்வை கிடைக்கப் போவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து கண்பார்வை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டே இருந்தேன். இதற்காக நிறைய பரிசோதனைகள் செய்து சிகிச்சைகள் எடுத்துக்கொண்டேன். அமெரிக்காவில் சென்று சிகிச்சை எடுத்தேன். அங்குள்ள டாக்டர்கள் நவீன டெக்னாலஜி மூலம் சிகிச்சை அளித்தார்கள். அடுத்த வருடம் எனக்கு பார்வை வந்துவிடும் என்று சொல்லி இருக்கிறார்கள். இப்போது எனக்கு வெளிச்சத்தை உணர முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.