பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களை கழுவி ஊற்றிய பாடகி சுசித்ரா.. வைரலாகும் வீடியோ.!

பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களை கழுவி ஊற்றிய பாடகி சுசித்ரா.. வைரலாகும் வீடியோ.!


singer-suchithra-controversial-talk-about-bigboss-house

நெதர்லாந்தில் எண்டமோல் நிறுவனம் உருவாக்கிய "பிக் பிரதர்" நிகழ்ச்சியை பின்பற்றி இந்தியாவில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதன் முதல் தமிழ் பதிப்பு 2017ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி ஒளிபரப்பானது. நடிகர் கமலஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

bigboss

தற்போது இந்நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் ஒளிபரப்பாகி உள்ளது. முதல் சீசனில் இருந்து ஒவ்வொரு சீசனிலும் தொடர்ந்து ஒரு ஜோடி காதல் கிசு கிசுவில் சிக்கி வருகிறது. ஓவியா-ஆரவ், லாஸ்லியா-கவின், ஷிவானி நாராயணன்- பாலா, நிவாஷி-அசல் கோலார் ஆகியோர் பற்றி கிசு கிசு வெளியானது.

இந்நிலையில், இந்த சீசனின் காதல் ஜோடி ரவீணா-மணி ஆகியோர் என்ற கிசு கிசு வெளியானது. இந்நிலையில் இவர்களுடன் தற்போது ஐஷு-நிக்சன் ஜோடியும் காதல் கிசு கிசுவில் சிக்கியுள்ளது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் நன்றாக பழகி வந்த இவர்கள், தற்போது எல்லை மீறி வருகின்றனர்.

bigboss

இதுகுறித்து கருத்து கூறியுள்ள பாடகி சுசித்ரா, "பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிள்ளைகளை அனுப்பிவிட்டு அனைத்து பெற்றோர்களும் அல்லுவிட்டு இருக்காங்க. ஐஷு பெற்றோர்களை நினைச்சா பாவமா இருக்கு. இந்த பொண்ணால அவங்க தெருவுல மூஞ்ச காட்ட முடியாது" என்று காட்டமாக கூறியுள்ளார்.