பாடகி எஸ்.ஜானகி நலமாக உள்ளார்! எஸ்.ஜானகி அவர்களின் மகன் வெளியிட்ட தகவல்! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் சினிமா

பாடகி எஸ்.ஜானகி நலமாக உள்ளார்! எஸ்.ஜானகி அவர்களின் மகன் வெளியிட்ட தகவல்!

இந்தியாவின் புகழ் பெற்ற திரைப்படப் பாடகி எஸ்.ஜானகி ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். பல பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். 

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் பிறந்த எஸ்.ஜானகி, சிறு வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார்.  தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப்பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். இவர் நான்கு முறை தேசிய விருது பெற்றவர் ஆவார். 

தற்போது வயது மூப்பு காரணமாக எஸ்.ஜானகி பாடுவதை நிறுத்திக்கொண்டார். தற்போது ஐதராபாத்தில் வசித்துவருகிறார் எஸ்.ஜானகி. சமீப காலமாக இவரது உடல்நலம் குறித்து தவறான தகவல்கள் இணையத்தில் பரவுகின்றன. இதுகுறித்து எஸ்.ஜானகி  அவர்களின் மகன், அம்மாவிற்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது உடல்நிலை நன்கு முன்னேறி வருகிறது. அம்மா நலமாக உள்ளார். யாரும் தவறான செய்தியை பரப்பவேண்டாம் என தெரிவித்துள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo