நீண்ட நாட்களுக்கு பிறகு அழகிய புகைப்படத்துடன், ரகசியத்தை போட்டுடைத்த பாடகி ரம்யா! மகிழ்ச்சியோடு குவியும் வாழ்த்துக்கள்! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

நீண்ட நாட்களுக்கு பிறகு அழகிய புகைப்படத்துடன், ரகசியத்தை போட்டுடைத்த பாடகி ரம்யா! மகிழ்ச்சியோடு குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் சீசனில் கலந்துகொண்டவர் பிரபல பாடகி ரம்யா.  இவர் கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் அவர்களின் பேத்தி  ஆவார். ரம்யா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 400க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். 

இவர் கடந்த ஆண்டு சீரியல்  நடிகரான சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  இந்நிலையில் அவர் தற்போது தனக்கு குழந்தை பிறந்துள்ளது என்ற  மகிழ்ச்சியான செய்தியை தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். 

மேலும் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அவர், எனக்கு நெருக்கமான பலர் உங்கள் உடல்எடை நாளுக்கு நாள்  அதிகரித்துகொண்டே வருகிறதே ஏன் என கேள்வியை கேட்டிருந்தனர். அவர்களுக்கெல்லாம் இதுகுறித்து சீக்கிரம் தெரிவிக்கிறேன் என பதிலளித்து வந்தேன். 

அது இதுதான், , நான் சமீபத்தில் குழந்தையை பெற்றெடுத்தேன் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து  கொள்கிறேன். மேலும் இதற்கு பிறகு எனது உடல்நலம் மற்றும் உடற்பயிற்சியில் அதிக கவனம் எடுத்துக் கொள்கிறேன். அனைவருக்கும் மிக்க நன்றி என பதிவிட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து அம்மாவான பாடகி ரம்யாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo