சினிமா

அட.. எப்படி இருந்த சிம்ரன் இப்படி ஆகிடீங்களே! லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்டு செம வருத்தத்தில் ரசிகர்கள்!

Summary:

நடிகை சிம்ரனின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை சிம்ரன். இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சரத்குமார், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ஹீரோக்களுக்கு இணையாக இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இந்நிலையில் இடையில் சில காலங்கள் சினிமாவிற்கு இடைவெளி விட்டிருந்த சிம்ரன் கடந்த சில ஆண்டுகளாக தற்போது மீண்டும் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷ படுத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதைக் கண்ட ரசிகர்கள் எப்படி இருந்த சிம்ரன் இப்படி ஆகிடீங்களே வயசாகிவிட்டது என ஷாக்காகியுள்ளனர். 


Advertisement