
Simbus manadu movie updates
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், மாநாடு படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது உடல் எடையை குறைப்பதற்காக சிம்பு வெளிநாடு சென்றுவிட்டதாலையும், குறிப்பிட்ட நேரத்தில் மாநாடு படம் தொடங்க சிம்பு வராததாலும் மாநாடு படம் கைவிடப்பட்டதாக தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் மகாமாநாடு படத்தை தயாரிப்பின் என சிம்புவின் தந்தை TR தெரிவித்திருந்தார். இது ஒருபுறம் இருக்க, மீண்டும் மாநாடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும், விரைவில் சிம்பு மாநாடு படத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் விரைவில் STR in மாநாடு படபிடிப்பு தேதி அறிவிக்கப்படும் என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவின் புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.
விரைவில் str in மாநாடு படபிடிப்பு தேதி அறிவிக்கப்படும். pic.twitter.com/Zl6t5YOXvH
— sureshkamatchi (@sureshkamatchi) November 5, 2019
Advertisement
Advertisement