பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு திடீர்னு என்ன ஆச்சு.? இப்படி ஆகிட்டாங்களே.!
திடீரென அந்த புகைப்படத்தை பகிர்ந்த நடிகர் சிம்பு! ஏன்?என்னாச்சு? அக்கறையோடு விசாரிக்கும் ரசிகர்கள்!!
திடீரென அந்த புகைப்படத்தை பகிர்ந்த நடிகர் சிம்பு! ஏன்?என்னாச்சு? அக்கறையோடு விசாரிக்கும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு விளங்குபவர் டி.ராஜேந்தர். இவரது படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். டி.ராஜேந்தரரின் மகன் முன்னணி நடிகர் சிம்பு. அவர் தற்போது பத்து தல, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் டிஆருக்கு கடந்த மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் வயிற்றில் சிறு ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரது உடல்நலன் கருதி, உயர் சிகிச்சைக்காக டி.ஆரை குடும்பத்தினர் வெளிநாடு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை முடிந்து அவர் தற்போது பூரண குணமடைந்ததாக கூறபட்டது. மேலும் அமெரிக்காவில் சிம்பு தனது அப்பா மற்றும் அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலானது.
— Silambarasan TR (@SilambarasanTR_) July 5, 2022
இந்த நிலையில் ஓய்வு எடுப்பதற்காக தந்தையை அமெரிக்காவிலேயே தங்க வைத்துவிட்டு சிம்பு ஷூட்டிங்கிற்காக சென்னை திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் அவர் தற்போது தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதைக் கண்ட ரசிகர்கள் என்னாச்சு? அப்பா நலமாக உள்ளாரா? விரைவில் நன்கு குணமடைந்து வீடு திரும்பிவிடுவார் என கூறி வருகின்றனர்.