நாளைக்கு ஒரு தரமான சம்பவம் இருக்கு! சிம்பு ரசிகர்களுக்கு உற்சாக செய்தி! கொண்டாட தயாராகுங்க!!simbu-next-movie-titile-released-tomorrow

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இதன் டீசர் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இப்படத்தை தொடர்ந்து சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அரசியலை மையமாகக் கொண்ட இப்படத்தில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன், பாரதி ராஜா, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில் சிம்புவின் அடுத்த திரைப்படம் குறித்த மாஸான தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதாவது கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற மப்டி படத்தின் ரீமேக் தமிழில் உருவாகிறது. 

ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர். சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்கவுள்ளார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.  மேலும் அதில் வரும் டிசம்பர் 24-ந் தேதி இப்படத்தின் தலைப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.