சிம்பு பட நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்... ரசிகர்கள் அஞ்சலி.!Simbu movie actor prathip death

தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் கோட்டயம் பிரதீப். அந்த படத்தில் திரிஷாவின் மலையாள உறவினராக நடித்த அவர் சிம்பு மற்றும் விடிவி கணேஷ் ஆகியோரோடு உரையாடும் காட்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அதனை தொடர்ந்து ராஜா ராணி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவரின் தனித்துவமான நகைச்சுவையான நடிப்பிற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர்‌.

death

இந்நிலையில் இன்று காலை திடீரென மாரடைப்பால் காலமானார். 60 வயதாகும் பிரதீப்பின் இறப்பு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இறப்பிற்கு மலையாள திரையுலகினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.