சிம்புவின் அடுத்த படம் என்ன தெரியுமா? இணையத்தில் வைரலாகும் சிம்புவின் புகைப்படம்!!



simbu-first-look-next-flim

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் செக்கச் சிவந்த வானம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில், சிம்புவை வைத்து சுந்தர் சி இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் சமீபத்தில் தொடங்கியது.

இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் சமந்தா இணைந்து நடித்த 'அத்திரண்டிகி தாரேதி' என்ற படம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் பவன் கல்யாணுடன் சமந்தா மற்றும் இரண்டு ஹீரோயின்கள் நடித்திருந்தனர்.

tamilspark

மேலும் நதியா, பொமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்தப் படம் வெளியாகி அதிக வசூலை குவித்து சாதனை படைத்தது. மேலும் 4 நந்தி விருதுகளைப் பெற்ற இந்தப் படம் கன்னடம் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்தப் படத்துக்காக சிம்பு புதிய கெட்-அப்புக்கு மாறியிருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

tamilspark

தற்போது இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. இப்படத்திற்கு சுந்தர் சியின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறியுள்ள ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.