1980களில் ரசிகர்களின் கனவுக் கன்னி காந்தக்கண்ணழகி பிறந்த தினம் இன்று! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

1980களில் ரசிகர்களின் கனவுக் கன்னி காந்தக்கண்ணழகி பிறந்த தினம் இன்று!


காந்தக்கண்ணழகி சில்க் ஸ்மிதா நடித்த எத்தனையோ படங்கள் இன்னமும் டிவியில் ஒளிபரப்பு ஆகும் பொழுது அவரது நீங்காத நினைவுகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக சில்க் ஸ்மிதா திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்தார்.

1960ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி பிறந்த இவர், சினிமாவிற்கு வருவதுக்கு முன்பு இவர் மூன்று சக்கர பெரிய சைக்கிள் வண்டி வைத்து மாவு விற்றுக்கொண்டு இருந்தார். அப்படி ஒரு நாள் தன் முந்தானையை லாவகமாக மாற்றும் ஸ்டைலை பார்த்துத் தான் நடிகர் வினுசக்ரவர்த்தி சினிமாவுக்கு அழைத்து வந்தார் என்று பல முறை அவரே கூறி இருக்கிறார்.

பாலுமேகேந்திரா இயக்கத்தில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த மூன்றாம் பிறை படத்தில் நடித்தார் சில்க் ஸ்மிதா. 1980களில் ரசிகர்களின் கனவுக் கன்னி என்று பேசப்பட்டவரும், சர்ச்சைக்குரிய நட்சத்திரமாக அறியப்பட்டவருமான மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாள் இன்று.
 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo