கொரோனாவால் உயிருக்கு போராடிய லண்டன் இளம் பெண்ணை காப்பாற்றிய தமிழகத்தை சேர்ந்த சித்த மருத்துவர்..! அவர் வெளியிட்ட ஆதார ஆடியோ.!



sidha-doctor-says-he-have-medicine-for-corono

கொரோனாவால் உயிருக்கு போராடிய லண்டன் பெண் ஒருவரை தனது மருந்து ழூலம் காப்பாற்றியுள்ளதாக தமிழகத்தை சேர்ந்த  சித்த மருத்துவர் தணிகாசலம் என்பவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கிய ஆரம்ப கால கட்டத்திலையே அதாவது, கடந்த ஜனவரி மாதத்தின் கடைசியில், இந்த வைரஸை குணப்படுத்த தன்னிடம் மருந்து இருப்பதாக தமிழகத்தை சேர்ந்த சித்த மருத்துவர் தணிகாசலம் வெளியிட தகவல் தமிழ் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், தற்போது லண்டனில் கொரோனா வைரஸ் காரணமாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண் ஒருவரை காப்பாற்றியுள்ளதகவும், அதற்கு ஆதாரமாக லண்டனில் இருக்கும் அந்த பெண்ணே பேசும் ஆடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் சித்த மருத்துவர் தணிகாசலம்.