பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
கறுப்பு நிற உடையில் மாடர்ன் லுக்கில் கலக்கி வரும் ஸ்ருதிஹாசன்.. ரசிகர்களை ஆச்சரியபடுத்திய நடிகை.?
உலகநாயகனின் மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கு திரையுலகில் பிஸியாக உள்ளார். 2000ஆம் ஆண்டு தனது தந்தை இயக்கி வெளியான 'ஹே ராம்' திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துறையில் தனக்கான பயணத்தை தொடங்கினார். அதன்பின் ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானார்.
தெலுங்கு மற்றும் தமிழில் 2011 ஆம் ஆண்டு அறிமுகமான ஸ்ருதி, தமிழில் 'ஏழாம் அறிவு' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அந்தப் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை ஃபிலிம் அவார்டு பெற்றிருந்தார். அதைத் தொடர்ந்து பாடகராவும் திரைத்துறையில் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டார். மேலும் ஸ்ருதி ஹாசன் தனக்கென ஒரு சொந்த இசைக்குழுவை வைத்திருக்கிறார்.
இதே நிலையில், திரையில் நடிப்பு, இசை என இவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருவார் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் இவர் கருப்பு கலர் உடை அணிந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட படங்கள் வைரலாகி வருகிறது.