சினிமா

மகப்பெரிய கடை திறப்பு விழாவில் மிகச்சிறிய உடையுடன் கலந்துகொண்ட சுருதிஹாசன்!

Summary:

Shruthihaasan with short skirt

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் சுருதிஹாசன். மெல்லிய உடல் அமைப்பு கவர்ச்சியான உடை மற்றும் நடனம் மூலம் ரசிகர்களை தன் பக்கம் சுண்டி இழுத்தவர் சுருதிஹாசன். மேலும் ஒரு பாடகியாகவும் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறார்.

அவரது தந்தை ஒரு முழுநேர அரசியல்வாதியாக மக்களுக்கு சேவை செய்யபோகிறேன் என களத்தில் இறங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கமல் தனது கட்சியில் வாரிசுகளுக்கு இடமில்லை என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். அதனால் என்னவோ தெரியவில்லை, தனது தந்தை அரசியலில் இருக்கிறார் என்ற எண்ணம் துளியளவும் இல்லாமல் ஹாயாக இருக்கிறார் சுருதிஹாசன். 

சுருதிஹாசன் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது அணியும் உடைகள் பல சமயங்களில் பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது. இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் மார்க்ஸ்&ஸ்பென்சர் 75ஆவது கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட சுருதிஹாசன் மிகச்சிறிய உடை அணிந்து வந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement