சினிமா

திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்து தனது திருமண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா சரண்! தீயாய் பரவும் புகைப்படம்.

Summary:

Shreya

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷாவுடன் இணைந்து எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஷ்ரேயா. அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில், ரஜினி, விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். 

இந்நிலையில் தற்போது திருமணமாகி இரண்டு வருடங்களை கடந்த நிலையில் தனது திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அந்த புகைப்படத்தை வைரலாகி வருகின்றனர். 

View this post on Instagram

Love you forever and ever @andreikoscheev

A post shared by Shriya Saran (@shriya_saran1109) on


Advertisement