விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற குக் வித் க
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு தனது ரகளைகளால் அனைவரையும் ரசிக்க வைத்து , மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.
அதிலும் ஷிவாங்கி போட்டியாளர் அஸ்வின் மற்றும் புகழுடனும் சேர்ந்து செய்யும் அட்ராசிட்டிகள் வேற லெவல். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறுபிள்ளை போல சேட்டைகள் செய்துவரும் ஷிவாங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர். மேலும் அவருக்கு தற்போது சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவிற்கான முன்னோட்டமாக ஏராளமான நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் வருத்தப்படாத வாலிபர் என்ற பெயரில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவாங்கி பள்ளி காலத்தில் தனது குரலை வைத்து பலரும் தன்னை அவமானப்படுத்தியதாகவும் இதற்காக அவர் பெரிதும் வருத்தப்பட்டதாகவும் கண்கலங்கி கூறியுள்ளார். தற்போது அனைவரும் தன்னை அவர்கள் வீட்டுப் பிள்ளையாக ஏற்றுக் கொண்டு, பெரியவர்கள் தன்னை ஆசீர்வாதம் செய்வது குறித்தும் நிகழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது
Advertisement
Advertisement