சினிமா

இந்த காலத்திலேயும் இப்படியா? 3 நிமிடத்திற்கு 10கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த பிரபல நடிகை!! ஏன் தெரியுமா?

Summary:

Shilpha shetty didnot act in tablet ad

தமிழ் சினிமாவில் இயக்குனர் பிரபுதேவாவுடன் இணைந்து மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் குஷி படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். மேலும் இவர் தெலுங்கு, கன்னடம், இந்தியில் ஏராளமான படங்களிலும் நடித்து பெருமளவில் பிரபலமாகியுள்ளார்.

மேலும் ஷில்பா ஷெட்டிக்கும், தொழில் அதிபர் ராஜ்குந்த்ராவுக்கும் கடந்த 2009-ஆம் ஆண்டு  திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது.

ஷில்பா ஷெட்டி சினிமா மட்டுமின்றி பல விளம்பரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் பிரபல நிறுவனம் ஒன்று உடல் எடை குறைக்கும் மாத்திரைகள் மற்றும் பவுடர் குறித்த மூன்று நிமிட விளம்பரத்தில் நடிக்குமாறு அவரிடம் கேட்டுள்ளனர். மேலும், அதற்கு 10 கோடி ரூபாய் சம்பளம்  தருவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் உடல் எடை குறைப்பது என்பது மனம் மற்றும் உடல் நலம் சமபந்தபட்டது. முறையான உணவு மற்றும் உடற்பயிற்சி மட்டுமே உடல் எடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு. மாத்திரைகள் ஆரம்பத்தில் உடல் எடையை குறைத்து பின்விளைவுகளை ஏற்படுத்தகூடியது.இந்த விளம்பரத்தில் நடித்து மக்களின் உடல் நலத்தோடு நான் விளையாட விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

 

 


Advertisement