அடேங்கப்பா.. வேற லெவல்! 10 வயசுலேயே இப்படியொரு பிசினஸா! அசத்தும் நடிகை ஷில்பா ஷெட்டியின் மகன்!!

அடேங்கப்பா.. வேற லெவல்! 10 வயசுலேயே இப்படியொரு பிசினஸா! அசத்தும் நடிகை ஷில்பா ஷெட்டியின் மகன்!!


shilpa-shetty-son-starting-new-shoe-business

பாலிவுட் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து அவர் விஜய் நடிப்பில் வெளிவந்த குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அசத்தி இருந்தார்.

ஷில்பா ஷெட்டி கடந்த 2009ஆம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு கடந்த 2012ஆம் ஆண்டு ஆண்குழந்தை பிறந்தது. பின் 8 வருடங்களுக்கு பின் வாடகைத் தாய் மூலம் அவருக்கு பெண்குழந்தை பிறந்தது. அதனை தொடர்ந்து அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஷில்பா ஷெட்டியின் 10 வயது மகன் விஷான் தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். மேலும் VRKICKS என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் மூலம் அவர் பிரத்யேகமான ஷூக்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறாராம். 

இந்நிலையில் தனது மகனை ஊக்குவிக்கும் வகையில் தனது மகன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான முதல் ஷூவை ஷில்பா ஷெட்டியே வாங்கியுள்ளார். மேலும் அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.