சினிமா

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது.! என்ன காரணம் தெரியுமா.?

Summary:

ஆபாச பட வழக்கில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ்குந்த்ராவை ம

ஆபாச பட வழக்கில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ்குந்த்ராவை மும்பை போலீசார் கைது செய்தனர்.

தமிழில் சினிமாவில் நடிகர் விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் கடந்த 2009ஆம் ஆண்டு தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்தார். ஷில்பா ஷெட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஷில்பா ஷெட்டியின் கணவர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். சில செயலிகள் மூலம் ஆபாச படங்கள் தயாரித்து, அதனை விநியோகம் செய்ததாக கடந்த பிப்ரவரி மாதம் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியாக அவர் உள்ளதாகவும், இதில் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளது எனவும் மும்பை போலீஸ் கமிஷனர் வெளியிட்ட  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Advertisement