சினிமா

என்னது! 1 கிலோ தங்கம் மோசடி செய்தோமா? நடந்தது இதுதான்! பரபரப்பாக விளக்கமளித்த நடிகை ஷில்பா ஷெட்டி!

Summary:

Shilpa shetty explain about portuary in 1kg gold

தமிழ் சினிமாவில் மிஸ்டர் ரோமியோ என்ற திரைப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா ஷெட்டி. அவர் அதனை தொடர்ந்து விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.பாலிவுட் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா.

இருவரும் சத்யுக் தங்கம் வர்த்தக நிறுவனத்தில் இயக்குநராக இருந்தனர். இந்நிலையில் இந்த நிறுவனத்தில் வெளிநாட்டில் வசித்து வந்த இந்தியரான சச்சின் ஜோஷி என்பவர் ஒரு கிலோ தங்கத்துக்கான திட்டத்தில் இணைந்திருந்தார். இது 5 வருடத்திற்கான திட்டமாகும்.

இந்நிலையில் 5 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், தங்கத்தை வாங்க மும்பையில் உள்ள அவர்களது நிறுவனத்திற்கு  சென்றபோது அலுவலகம் மூடப்பட்டு இருந்ததாகவும், தன்னை ஏமாற்றி மோசடி செய்து விட்டதாகவும் ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ்குந்த்ரா மீது சச்சின் ஜோஷி மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், ஷில்பா ஷெட்டி அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சச்சின் ஜோஷியின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். அவருக்கு ஒரு கிலோ தங்கத்தை நாங்கள் அளித்துவிட்டோம். ஆனால் அவர்தான் அதற்கான சட்டப்பூர்வமான சுணக்க கட்டணத்தை செலுத்தவில்லை. மோசடி செய்துள்ளார். இதுகுறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம். அத்துடன் அவர் மீது காசோலை மோசடி புகாரும் அளித்துள்ளோம். இந்த பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய நீதிமன்றம் ஒருவரை நியமித்துள்ளது என கூறியுள்ளார். 


Advertisement