சினிமா

தான் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது ஏன்? முதன்முறையாக விளக்கமளித்த ஷில்பா!

Summary:

Shilpa said about her second baby

தமிழ் சினிமாவில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஷில்பா ஷெட்டி. மேலும் அவர் குஷி படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து ரசிகர்களின் மனதை பெருமளவில் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து நடிகை ஷில்பா ஷெட்டி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். 

இந்நிலையில் கடந்த 2009-ஆம் ஆண்டு ஷில்பா ஷெட்டி தொழில் அதிபர் ராஜ்குந்த்ரா என்பவரை  திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதியினருக்கு வியான் என்ற ஒரு ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஷில்பா ஷெட்டிக்கு  இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் அவர் தனது இரண்டாவது குழந்தையை வாடகை தாய் மூலம் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் ஷில்பா செட்டி சமீபத்தில் பேட்டி ஒன்றில் முதல் முறையாக தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதற்கான காரணத்தை கூறியுள்ளார். ஷில்பா ஷெட்டி கூறும்போது எனது மகனுக்கு சகோதர உணர்வோடு இன்னொரு குழந்தை வேண்டும் என விரும்பினேன். அதற்காக இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள தயாரானேன். ஆனால் இருமுறை கருத்தரித்தும் எனது உடல் நலக்குறைபாட்டால் கரு வளர்ச்சி அடையாமல் கருச்சிதைவு ஏற்பட்டது. பின்னர் குழந்தை ஒன்றை தத்து எடுத்துக்கொள்ளலாம் என விரும்பினேன் ஆனால் அதுவும் நடக்கவில்லை. பின்னரே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தேன் என ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.


Advertisement