பிக்பாஸ் முடிந்த நிலையில் முதன்முறையாக தர்சனுடன் ஷெரின்! வைரலாகும் புகைப்படம்!!

பிக்பாஸ் முடிந்த நிலையில் முதன்முறையாக தர்சனுடன் ஷெரின்! வைரலாகும் புகைப்படம்!!


sherin-with-tharshan-photo-viral

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் இலங்கையைச் சேர்ந்த விளம்பர மாடலான தர்ஷன். 

மேலும் பிக்பாஸ் இறுதி கட்டத்திற்கு சென்று இவர்தான் வெற்றிபெறுவார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் அவர் குறைந்த வாக்குகளைப்பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tharshan

 

மேலும் இவர் மற்றொரு போட்டியாளரான ஷெரினுடன் பிக்பாஸ் வீட்டில் நெருங்கி பழகி வந்தார். மேலும் இருவரும் காதலிப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தர்ஷன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.ஷெரின்  இறுதிக்கட்டம் வரை சென்றார்இறுதிக்கட்டம் வரை சென்று நான்காவது இடத்தை வென்றார். 

 ஆனால் அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஷெரின் தர்சனின் காதல் விவகாரம் தெரிந்த நிலையில் அவரிடம் இருந்து முற்றிலும் ஒதுங்கிவிட்டார். மேலும் இருவரும் ஒன்றாக இருக்கும்படி ஒரு புகைப்படம் கூட வெளிவரவில்லை. இந்நிலையில் ஷெரின் மற்றும் தர்ஷன் இருவரும் ரசிகர் ஒருவருடன் ஒன்றாக புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை ரசிகர் உற்சாகத்துடன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.